மேலும் செய்திகள்
நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
07-Nov-2025
தேனி: உத்மபாளையம் தாலுகா, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை(நவ.,15) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு பெண்கள் நலன், குழந்தைகள் நலன், காது, மூக்கு, தொண்டை, கண், பல் மருத்துவ சிகிச்சைகள், இ.சி.ஜி., எக்கோ, அல்டரா ஸ்கேன், சோனோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும். உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள், கட்டுமானம், அமைப்பு சாரா நல வாரியங்களில் பதிவு செய்தவர்கள், ஓய்வூதியர்கள் நலவாரிய அட்டை, அடையாள அட்டை நகலுடன் பங்கேற்க வேண்டும். மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
07-Nov-2025