உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மீண்டும் வேகமெடுக்கும் ஆண்கள் கு.க., ஆப்பரேஷன் சுய பரிசோதனை பெட்டகம் தயார்

 மீண்டும் வேகமெடுக்கும் ஆண்கள் கு.க., ஆப்பரேஷன் சுய பரிசோதனை பெட்டகம் தயார்

கம்பம்: ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் மீண்டும் வேகப்படுத்த துவங்கியுள்ளனர். குழந்தை பிறப்பை தள்ளிப் போட அரசு மருத்துவமனைகளில் சுய பரிசோதனை பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளது. கொரோ காலத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இதற்கென கூடுதல் டாக்டர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சிறப்பு அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டது. அரசின் ஊக்கத்தொகையோடு கலெக்டர் தனது சொந்த நிதியில் இருந்தும் வழங்கினார். ஆனால் கடந்த 6 மாதங்களாக எந்த சிறப்பு முகாமும் நடத்தவில்லை. குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷனில் ஆர்வம் காட்டாத நிலை இருந்து. தற்போது ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சைகளில் குடும்ப நலத்துறை மீண்டும் வேகம் காட்ட துவங்கி உள்ளது. கடந்த வாரங்களில் டொம்புச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஊக்கத் தொகை ரூ 1100 , கலெக்டரின் ஊக்கத் தொகை 3900 ஆக மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குநர் அன்புச்செழியன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் ஆண்களுக்கான வாசக்டமி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கவனம் செலுத்தப்படுகிறது. குழந்தை பிறப்பை தள்ளிப் போட விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்படும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுய பரிசோதனை பெட்டகம் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆணுறை, கருத்தடை மாத்திரை, சிறுநீர் பரிசோதனை செய்யும் 'கிட்' என மூன்று பொருள்கள் இருக்கும். உடலுறவு கொண்ட 72 மணி நேரத்திற்குள் அவசர கால கருத்தடை மாத்திரையை உட்கொண்டால் கருத்தரிக்காது. சிறுநீர் பரிசோதனை கிட்டை பயன்படுத்தியும் கருத்தரிப்பை உறுதி செய்யலாம். பொதுமக்கள் சுய பரிசோதனை பெட்டகத்தை பயன்படுத்திட முன்வர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !