போடியில் நர்சிங் மாணவி மாயம்
போடி: போடி அருகே மீனாட்சிபுரம் புன்னைவனம் தெருவை சேர்ந்தவர் சுருளி 48. இவரது மகள் நிவேதா 19. இவர் போடி அருகே தனியார் நிறுவனத்தில் நர்சிங் கோர்ஸ் படித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சுருளி புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.