மேலும் செய்திகள்
மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் கைது
15-Aug-2025
கஞ்சா விற்றவர் இருவர் கைது தேனி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பெரியகுளம் கொடைக்கானல் ரோடு டி.காமக்காபட்டி அம்சாபுரத்தில் ரோந்து சென்றனர். அங்கு அம்சாபுரத்தை சேர்ந்த ராமன் 36, பையை பரிசோதனை செய்த போது விற்பனைக்காக வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர். தேனி: கம்பம் வடக்கு போலீசார் கோம்பை ரோடு தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அங்கு அதேப்பகுதியை சேர்ந்த மாயாண்டி 65, ரூ.500 மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கையில் வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார்,கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர். தகராறில் ஒருவர் மீது வழக்கு தேனி: பழனிசெட்டிபட்டி சுகதேவ் தெரு ராமச்சந்திரன் 30. இவர் பழனிசெட்டிபட்டியில் ஓட்டல் பின்புறம் கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.அதன் அருகில் உள்ள இடத்தில் ரமேஷ் 31, லேத் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இருவருக்கும் இடையே 2 அடி இடப்பிரச்னை இருந்துள்ளது. ராமச்சந்திரன் கடை அருகில் பெயிண்ட் கேன் வைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரமேஷ், தகராறில் ஈடுபட்டு ராமச்சந்திரனை தாக்கினார். இதனால்பாதிக்கப்பட்ட ராமச்சந்திரன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் ரமேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிறுமி மானபங்கம் தொழிலாளிக்கு சிறை தேனி: கம்பம் அருகே உள்ள ஊரில் ஒரு பெண் தனது மகள்கள், மகன், மாமியாருடன் வசித்து வந்தார். 2022ல் ஆக 5ல் மதியம் காம்ப்பவுண்டில் அருகே உள்ள வீட்டில் வசிக்கும்கூலி தொழிலாளியான 51 வயதான நபர், 9 வயது சிறுமியைஆபாச செய்கை செய்து, ஆடைகளை நீக்கக்கூறி மானபங்கம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகாரில், தொழிலாளியை போலீசார்கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து, நீதிபதி கணேசன், கூலித் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம்அரசு வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
15-Aug-2025