பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்
தேனி: தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி இமயம் தலைமையில் கட்சியினர் அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., அரசை கண்டித்தும், அரசு பஸ்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் பதிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். நிர்வாகிகள் பிரபாகரன், குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.