ஐந்து அரசு பள்ளிகளில் ஐ.டி.ஐ., அமைக்க பரிந்துரை
தேனி: அரசு பள்ளி வளாகத்தில் ஐ.டி.ஐ., துவக்க தேனி மாவட்டத்தில் 5 பள்ளிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் ஐ.டி.ஐ., அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இங்கு மாணவர்களுக்கு கல்வியுடன் தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் கூடுதலாக 50 சென்ட் நிலம், கட்டடங்கள் உள்ள பள்ளிகள் விவரங்களை அனுப்பி வைக்க சி.இ.ஓ.,க்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் இருந்து அரசு குறிப்பிட்டுள்ள 50 சென்ட் இட வசதி உள்ள வீரபாண்டி, சிலமலை, உத்தமபாளையம் மாதிரி மேல்நிலைப்பள்ளி, வடுகபட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய 5 அரசுப்பள்ளிகளில் ஐ.டி.ஐ., அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.