உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குமுளி மலைப்பாதையில் மணல் மேடுகளால் விபத்து அபாயம் - டூ வீலரில் செல்பவர்கள் எச்சரிக்கை

 குமுளி மலைப்பாதையில் மணல் மேடுகளால் விபத்து அபாயம் - டூ வீலரில் செல்பவர்கள் எச்சரிக்கை

கூடலுார்: குமுளி மலைப்பாதையில் ரோட்டின் இரு பகுதிகளிலும் குவிந்துள்ள மணல் மேடுகளால் விபத்து அபாயம் உள்ளது. டூவீலர்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். மாதா கோயில் வளைவு, இரைச்சல் பாலம் வளைவு, கொண்டை ஊசி வளைவு உள்ளிட்ட பல ஆபத்தான வளைவுகள் உள்ளன. சபரிமலையில் மண்டல கால பூஜை துவங்க உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் அதிகம். போக்குவரத்து அதிகம் உள்ள மலைப்பாதையில் லோயர்கேம்ப் மின் நிலையத்திற்கு மின் உற்பத்திற்கு தண்ணீர் வரும் நான்கு ராட்சத குழாய்களுக்கு மேல் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் நான்கு பாலங்கள் உள்ளது. இப்பாலத்தின் இரு பகுதிகளிலும் சமீபத்தில் பெய்த மழையால் மணல் மேடுகள் அதிகமாக உள்ளது. இதனால் இரண்டு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத வகையில் உள்ளது. மேலும் டூவீலரில் செல்பவர்கள் மணல் மேடுகளில் கடந்து செல்ல முடியாமல் கீழே விழுந்து செல்கின்றனர். இதன் மூலம் வாகன விபத்துக்கள் நடந்தால் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்திற்கு வழி வகுக்கும். மழை குறைந்து பல நாட்களாகியும் மணல்மேடுகளை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இதுவரை அகற்றவில்லை மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் சீரமைப்பு பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை