கவுமாரியம்மன் கோயிலில் ரூ.8.71 லட்சம் காணிக்கை
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பக்தர்கள் ரூ.8.71 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் 12 நிரந்த உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் கண்ணீஸ்வர முடையார் கோவிலில் உள்ள இரு உண்டியல்கள் என மொத்தம் 15 உண்டியல்கள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமையில், தேனி உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலையில் நடந்தது. கோவில் பணியாளர்கள், தேனி சவுராஸ்டிரா கலை கல்லுாரி மாணவிகள், பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் காணிக்கையாக ரூ.8.71 லட்சம், தங்கம் 26 கிராம், வெள்ளி 15 கிராம் இருந்தன. கடந்த செப்டம்பரில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. துறை ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் நாராயணி ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை ஒருங்கிணைத்தனர்.