பள்ளி ஆண்டு விழா
கம்பம்: ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப் பள்ளியின் 63 வது ஆண்டு விழா எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்தது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாமஸ், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி வரவேற்றனர். இப்பள்ளி முன்னாள் மாணவரும், தற்போது இடுக்கி மாவட்ட மருத்துவ அலுவலரான மணிகண்டன், மலப்புரம் மருத்துவமனை டாக்டர் சரிதா, திருவனந்தபுரம் பொதுச் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சசிக்குமார் ஆகியோர்களை பள்ளி தாளாளர் பிரபாகர் கவுரவித்தார். கற்பித்தல் பணியில் வெள்ளி விழா கண்ட ஆசிரியர்கள், கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை எம்.எல்.ஏ., வழங்கினார். உதவி தலைமையாசிரியர் நிர்மலா சகாயராணி நன்றி கூறினார்.