அறிவியல் தினவிழா
தேனி: சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் அறிவியல் தினவிழா நடந்தது. பள்ளி செயலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தன. 'மாசில்லா உலகம்'தலைப்பில் விவாதங்களும் நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.