தேனியில் நவ.10ல் ஒற்றுமை நடைபயணம்
தேனி: மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சார்பில் சர்தர் வல்லபாய் படேல் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் தோறும் ஒற்றுமை நடைபயணம் நடத்தப்பட்டு வருகிறது. தேனியில் நவ.,10 மதியம் 3:00 மணிக்கு நகராட்சி அலுவலகம் முதல் பங்களாமேடு வரை ஒற்றுமை நடைபயணம் நடத்த நேரு யுவகேந்திரா சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என நேரு யுவகேந்திர ஒற்றுமை நடைபயண மாவட்ட மேலிட பார்வையாளர் ராஜபாண்டியன், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஞானசந்திரன் தெரிவித்தனர்.