ஐ.டி.ஐ.,களுக்கான மாநில போட்டிகள் நிறைவு
தேனி: ஐ.டி.ஐ.,களுக்கான மாநில போட்டிகள் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 592 பேர் பங்கேற்றனர்.தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான குழு, தடகள போட்டிகள் நடந்தது. இதில் 235 மாணவிகள் பங்கேற்றனர். 100 மீ., ஓட்டத்தில் கூடலுார் மகளிர் ஐ.டி.ஐ., கலைவாணி, 400 மீ., தொடரோட்டத்தில் விழுப்புரம் அரசு ஐ.டி.ஐ., அணி, நீளம் தாண்டுதல் போட்டியில் மதுரை அரசு மகளிர் ஐ.டி.ஐ., சின்னம்மாள், குண்டு எறிதலில் அம்பத்துார் அரசு ஐ.டி.ஐ., பிரியதர்ஷினி, செஸ் போட்டியில் ஈரோடு அரசு ஐ.டி.ஐ., சர்மிளா, கேரம் போட்டியில் திருச்சி அரசு ஐ.டி.ஐ., அணி, டென்னிஸ் போட்டியில் சேலம் அணி, ஓவர் ஆல் சாம்பியன்பட்டத்தை விழுப்புரம் மண்டலம் அணி வென்றது.