வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொஞ்சம் விஷத்தை கலந்து கொடுக்கவும் அல்லது ஏரி சாராயத்தை கொடுக்கவும்
தேனி: பணம், மது கேட்டு மிரட்டும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் கோபிநாத் தலைமையில் சங்கத்தினர் வழங்கிய மனுவில், ' மாவட்டத்தில் 81 டாஸ்மாக் கடைகளிலும் தினமும் நிருபர்கள் என்ற போர்வையில் மது கேட்டும், பணம் கேட்டும் சிலர் அத்துமீறுகின்றனர். சில நாட்களுக்கு முன் ஜி.உசிலம்பட்டியில் நிருபர்கள் என கூறி விஜயலிங்கராஜா, ஹரிஹரன், ஜெகதீசன் ஆகியோர் விற்பனையாளரை தாக்கினர். டாஸ்மாக் கடைகளில் இலவசமாக மதுகேட்டும், பணம் கேட்டும் தொந்தரவு செய்யும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினர். வீரபாண்டி பேரூராட்சி வயல்பட்டு நடுத்தெரு முத்துப்பாண்டி மனுவில், 'எங்கள் கிராமத்திற்கு தாடிச்சேரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. சில மாதங்களாக அடிக்கடி பழுது ஏற்பட்டுகிறது. அல்லது குழாய் உடைகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. குடிநீருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்றிருந்தது. தீக்குளிக்க முயன்ற முதியவர்: கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் சோதனை செய்கின்றனர். ஆனால், மற்றொரு நுழைவாயிலில் சோதனை இல்லை. இதனால் சிலர் இந்த வழியாக பாட்டிலில் பெட்ரோலுடன் வருகின்றனர். குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,விடம்ஒரு முதியவர் மனு அளித்தார். பின் நுழைவாயில் அருகே வந்தவர் கொண்டுவந்த பையில் இருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வெளியே எடுத்து தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாட்டிலை பறித்தனர். பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இம்முடிவு எடுப்பதாக கூச்சலிட்டார். போலீஸ் விசாரணையில், அவர் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி நடுத்தெரு குருசாமி என தெரிந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தொடர்பாக மனு அளித்து தெரிந்தது.
கொஞ்சம் விஷத்தை கலந்து கொடுக்கவும் அல்லது ஏரி சாராயத்தை கொடுக்கவும்