மேலும் செய்திகள்
சித்ரா பவுர்ணமி வழிபாடு திண்டுக்கல்
13-May-2025
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி சதுர்வேத விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாளில் திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம் பூஜைகள் நடந்தது. தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுமங்கலி பூஜை, முதல் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இரவில் சுவாமி சுப்பிரமணியருக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. 2ம் நாளில் யாகசாலை பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணஹூதி நிகழ்ச்சிகளுக்குப்பின் கடம் புறப்பாடு, கோபுர விமான அபிஷேகம் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் பரிபார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
13-May-2025