உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுகாதாரப் பணியில் சுணக்கம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ.44  லட்சம் அபராதம்  தேனி நகராட்சி நடவடிக்கை

சுகாதாரப் பணியில் சுணக்கம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ.44  லட்சம் அபராதம்  தேனி நகராட்சி நடவடிக்கை

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் துாய்மைப் பணியில் விதிமுறைகளை பின்பற்றாத தனியார் நிறுவனத்திற்கு கடந்த இரு ஆண்டுகளில் ரூ.44 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் துாய்மைப் பணிகள் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு நடந்த ஏலத்தில் மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் நகர் துாய்மை பணிகள் மேற்கொள்ள கோரியது. குறிப்பிட்ட பணியாளர்கள் தினமும் வழங்க வேண்டும், நகராட்சி வாகனங்கள், உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு உரிய வாடகை வழங்க வேண்டும் என விதிமுறைகள் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் தனியார் நிறுவனம் குறிப்பிட்ட நபர்களை பணிக்கு அனுப்புவது இல்லை. இப்பணிகளை சரிவர மேற்கொள்வது இல்லை என, கவுன்சிலர்கள், பொது மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் அந்த நிறுவனத்திற்கு இதுவரை 10 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர குறிப்பிட்ட அளவு பணியாளர்களை வழங்காத காரணத்தால் இரு ஆண்டுகளில் ரூ. 44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை