வியாபாரிகளுக்கு பயிற்சி
தேனி:தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறை, நெஸ்லே இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் ரோட்டோர உணவு விற்பனையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சசீதீபா, நெஸ்லே நிறுவன அலுவலர் நாராயணன்நரமூர்த்தி முன்னிலை வகித்தனர். உணவு தயாரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், விற்பனை இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது பற்றி விளக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம், அலுவலர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.