ரோந்து போலீசாரை தாக்கி ஜீப்யை சேதப்படுத்திய இருவர் கைது
தேனி : தேனி அருகே வீரபாண்டி தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., செல்வராஜ், ஜீப் டிரைவரான போலீஸ்காரர் விவேகானந்தன் ஆகியோரை தாக்கி, ஜீப்பின்கண்ணாடியை சேதப்படுத்திய மீனாட்சிபுரம் மேற்குத்தெரு ஆண்டவர் 25, சிவா 26 இருவரை போலீசார் கைது செய்தனர். தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பிரி வு சிறப்பு எஸ்.ஐ., தலைமையில் அரசு ஜீப்பில் வீரபாண்டி - தேனி பைபாஸ் ரோட்டில் அக்.7 இரவு ரோந்து சென்றனர். தனியார் பள்ளி கூழ் கடைக்கு அருகே மீனாட்சிபுரம் மேற்குத்தெரு ஆண்டவர், சிவா ஆகிய இருவர் வாகனத்தை நிறுத்தி மது குடிக்க முயற்சித்தனர். சிறப்பு எஸ்.ஐ., இவர்களை விசாரித்த போது இருவரும் எஸ்.ஐ.,யையும், ஜீப் டிரைவரையும் திட்டி, ரோந்து ஜீப்பின் வலதுபுற கண்ணாடியை கைகளால் உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். அவ்வழியாக சென்றவர்களின் உதவியுடன் இருவரையும் வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., செல்வராஜ் புகாரில் ஆண்டவர், சிவா மீது வழக்குப்பதிந்து வீரபாண்டி போலீ சார் கைது செய்தனர்.