ஒற்றுமை நடைபயணம்
தேனி: மத்திய அரசின் இளைஞர் நலம், விளையாட்டு அமைச்சகம் சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத் திலும் அக்., 31 முதல் நவ., 25 வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேனியில் நேரு யுவகேந்திரா சார்பில் பெரியகுளம் ரோட்டில் நகராட்சி அலுவலகம் முதல் மதுரை ரோடு பங்களாமேடு வரை ஒற்றுமை நடைபயண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பா.ஜ. மாவட்ட தலைவரும், மேலிட பார்வையாளர் ராஜபாண்டியன், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஞானசந்திரன், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.