மேலும் செய்திகள்
குரு சாமி
05-Sep-2026
கூடலுார், செப். 26- கூடலுார் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இக் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நகராட்சித் தலைவர் பத்மாவதி கட்டடத்திற்கான சாவியை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லா பிச்சையிடம் வழங்கினார். முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. நகராட்சி தலைவர் பத்மாவதி, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் லோகந்துரை, சுகாதார ஆய்வாளர் அகமது கபீர், தலைமை ஆசிரியர் அல்லா பிச்சை, ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்,
05-Sep-2026