உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாணவர்களுக்கு வரவேற்பு விழா

 மாணவர்களுக்கு வரவேற்பு விழா

போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பிற்கு வருகை தந்த மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் விசுவாச ஜோன் பிரிட்டோ, துணை முதல்வர் சித்ராதேவி, நிர்வாக குழு உறுப்பினர் கள் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் மலர் தூவியும், மற்ற மாணவர்கள் நடனமாடியும், பலூன், பொம்மைகள் வழங்கி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !