உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

 மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கம்பம்:உத்தமபாளையம் அருகே கோம்பையை சேர்ந்தவர் செல்வம் 25. இவர் கேரளாவை சேர்ந்த ஜிஸ்மி 24 என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கம்பம் ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள தோட்டத்தில் தங்கி வேலை செய்தார். நேற்று காலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்த போது மின்கசிவு காரணமாக செல்வம் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். டாக்டர்கள் சிகிச்சையை துவக்கும் முன் இறந்தார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !