உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாய், மகனை அடித்து கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை

தாய், மகனை அடித்து கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி:திருநெல்வேலி மானுார் அருகே குறிச்சிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 45. 2010ல் தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள படப்பில் வைக்கோல் எடுக்க சென்ற போது சிராஜுதீன், 41, என்பவர் கள்ளக்காதலியான பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்தார். இதை கண்ட சுப்பிரமணி இருவரையும் கண்டித்து அனுப்பினார்.இதையடுத்து, கடந்த 2019 ஜூலை 22ல், வயலுக்கு சென்று விட்டு திரும்பிய சுப்பிரமணியையும், அவரது தாய் கோமதியையும், 65, சிராஜுதீன், அவரது நண்பர்கள் லத்தீப், நாகூர் மீரான் மற்றும் சிராஜுதீனின் காதலியும் சேர்ந்து அடித்து கொன்றனர். சிராஜுதீன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், கொலை வழக்கு விசாரணை நடந்தது. விசாரணையின் போது லத்தீப் இறந்து விட்டார்.குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், சிராஜுதீனின் காதலியை விடுதலை செய்த நீதிபதி பத்மநாபன், குற்றம்சாட்டப்பட்ட சிராஜுதீன், நாகூர் மீரானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ