உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குப்பையில் மாநகராட்சி புது வாகனங்கள் பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு

குப்பையில் மாநகராட்சி புது வாகனங்கள் பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு

திருநெல்வேலி, : மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சிக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பான்மையான பணிகள் கட்டடங்களாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளை சுத்தப்படுத்தும் இயந்திரம், நவீன டிராக்டர்கள் என, பல்வேறு வாகனங்கள் வாங்கப்பட்டன. ஆனால், அவற்றிற்கு டிரைவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.தற்போது துாய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. மாநகராட்சிக்கு கூடுதல் வாடகை செலுத்த வேண்டும் என்பதால், அந்த நிறுவனமும் இந்த டிராக்டர்களை பயன்படுத்துவதில்லை. இதனால் புதிய வாகனங்கள் குப்பை கிடங்குகளில் மக்கி கிடக்கின்றன. மைய அலுவலகத்தில் உள்ள டிராக்டர்கள், வாகனங்களில் இருந்த பேட்டரிகளும் திருடப்பட்டு விட்டன. அதிகாரிகளுக்கு இந்த திருட்டு விபரமே தெரியவில்லை.இது குறித்து மேயர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி