உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கார் - வேன் மோதலில் 2 பேர் பலி

கார் - வேன் மோதலில் 2 பேர் பலி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், நான்குவழிச் சாலை மைய தடுப்பை கடந்து சென்று சரக்கு வேன் மீது மோதியதில், இரண்டு பேர் பலியாகினர்.கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பறக்கையை சேர்ந்தவர் ராஜுலால் பிரைட், 55. இவர், 'ஸ்கோடா' காரில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி நான்குவழிச் சாலையில் நேற்று சென்றார். காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் அருகே மதியம் 1:30 மணியளவில், கார் கட்டுப்பாட்டை இழந்து மைய தடுப்பு மீது ஏறி, எதிர்புறம் ரோட்டில் சென்றது. அப்போது, அட்டைப்பெட்டிகள் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் சென்ற சென்னை பதிவெண் கொண்ட சரக்கு வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில், கார், வேன் முற்றிலும் நொறுங்கின. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி ராஜுலால் பிரைட் சம்பவ இடத்திலேயே பலியானார்.சென்னையைச் சேர்ந்த வேன் டிரைவர் படுகாயமடைந்து, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சரக்கு வேனுக்கு பின்னால் காய்கறிகள் ஏற்றிச்சென்ற இரு வேன்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இதில், காய்கறி வேன் டிரைவர் டிரைவர் ராஜ்குமார் காயமுற்றார். விபத்து குறித்து பணகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி