உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நாங்குநேரி கார் விபத்து 7 வயது சிறுமியும் பலி

நாங்குநேரி கார் விபத்து 7 வயது சிறுமியும் பலி

நாகர்கோவில்:நாங்குநேரி அருகே நடைபெற்ற கார் விபத்தில் ஆறு பேர் இறந்த நிலையில், படுகாயம் அடைந்து, 10 நாட்களாக சிகிச்சையில் இருந்த 7 வயது சிறுமியும், உயிரிழந்தார்.கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ், 68. திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் வசித்து வந்தார். ஏப்., 27ல் தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்கரட் மேரி, 57, மகன் ஜோபர்ட், 37, மருமகள் அமுதா, 32, பேரக்குழந்தைகள் ஜோஹனா, 9, ஜோபினா, 7, ஒன்றரை வயதான ஜோகன் ஆகியோருடன், மைலோடு வந்து விட்டு திருநெல்வேலி சென்றார்.நாங்குநேரி அருகே இவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில், ஜோபினா தவிர, ஆறு பேரும் இறந்தனர். ஜோபினா, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். இதைத் தொடர்ந்து, இந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இந்த காருடன் மோதிய, எதிரே வந்த மற்றொரு காரில் இருந்தவரும் இறந்து விட்டார். அவரையும் சேர்த்தால், விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை