உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மரப் பட்டறையில் தூங்கிய தச்சுத்தொழிலாளி கொலை ஒருவர் கைது

மரப் பட்டறையில் தூங்கிய தச்சுத்தொழிலாளி கொலை ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி கணேசன் 47. இவர் மானூர் அருகே வடக்கு வாகைகுளத்தில் உள்ள பர்னிச்சர் தயாரிக்கும் பட்டறையில் வேலை செய்து வந்தார். பட்டறை மாடி அறையில் தங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு கணேசன் உள்ளிட்ட சிலர் அங்கு அசைவ உணவு சமைத்து சாப்பிட்டனர். அப்போது தூத்துக்குடி பூபாலராயபுரத்தைச் சேர்ந்த சந்திரனுக்கும் 58, கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. பின் கணேசன் மாடி அறையில் தூங்கினார். நேற்று காலை 9:00 மணியளவில் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் கட்டிலில் கணேசன் இறந்து கிடந்தார். ஏ.எஸ்.பி., பிஸ்வஜித் பாண்டா மற்றும் மானூர் போலீசார் விசாரணை நடத்தினர். கணேசன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக பட்டறை உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுவோரிடம் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இந்நிலையில் கணேசன் கொலை தொடர்பாக சந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ