வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Dravidian culture at work
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை
14-Sep-2024
திருநெல்வேலி : தென் மாவட்டங்களில், பள்ளி மாணவர்களிடையே தொடர்ந்து நடந்து வரும் ஜாதி மோதல்கள் குறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால், திருநெல்வேலியில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் டி.ஜி.பி.,யுடன் தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, டி.ஐ.ஜி., மூர்த்தி, எஸ்.பி.,க்கள் மற்றும் உதவி ஐ.ஜி., ஸ்ரீநாத் பங்கேற்றனர்.தென்மாவட்டங்களில் நடந்து வரும் ஜாதி மோதல் தொடர்பான வன்கொடுமைகள், சமீப காலமாக பள்ளி மாணவர்களிடம் நடந்து வரும் ஜாதி மோதல்கள், வகுப்புகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வருவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆலோசிக்கப்பட்டன.சி.ஐ.டி., உணவு பொருள் கடத்தல், லஞ்ச ஒழிப்பு போலீஸ் உள்ளிட்ட மற்ற பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இன்று திருநெல்வேலியில் ஆயுதப்படை வளாகத்தில் போலீசாரிடம் குறைகளை கேட்டு மனு பெறுகிறார்.
Dravidian culture at work
14-Sep-2024