கல்லாவில் கை வைத்த சென்னை வாலிபர் கைது
திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் அலைபேசி விற்பனை கடைகளில் திருடிய வாலிபர் திருநெல்வேலியில் சிக்கினார்.திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அலைபேசி கடையில் சில தினங்களுக்கு முன்பு, கடைக்காரரிடம் பேசிக்கொண்டே கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை ஒரு நபர் அபேஸ் செய்யும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாயின.கடை உரிமையாளர் இருளப்பன் புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் ஒரு மொபைல் கடையில் நோட்டமிட்டபடி இருந்த அவரை கடைக்காரர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். கைதான நபர் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த பாபுராஜ் 36, என தெரியவந்தது .பாபுராஜ் தமிழகம் முழுவதும் இத்தகைய தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. அவருடன் அவரது கூட்டாளியான சென்னையைச் சேர்ந்த முகைதீன் என்பவரும் சிக்கினார். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.