உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மணல் கடத்தல் புகார் அளித்த தி.மு.க., நிர்வாகிக்கு மிரட்டல்

மணல் கடத்தல் புகார் அளித்த தி.மு.க., நிர்வாகிக்கு மிரட்டல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அழகப்பபுரத்தில், ஊராட்சி தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த ரமேஷ் அனுமதியின்றி கருமேனியாற்றில் மணல் அள்ளியதாக, தி.மு.க, கிளை செயலர் கணபதி, சி.ஐ.டி., போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்தனர்.மணல் கடத்தல் கும்பல், அருண்பாண்டியன் என்ற ரவுடி வாயிலாக, கணபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். கணபதி, திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசனிடம் புகார் அளித்தார். போலீசார் அருண்பாண்டியனை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன.மணல் அள்ளியவர், அது பற்றி புகார் தெரிவித்தவர் தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன், சபாநாயகர் அப்பாவு ஆகிய இரு அணிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தென்காசி மாவட்டம், சிவகிரியை சேர்ந்தவர் கார்த்திக், 34; நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். சிவகிரியில், 97 செங்கல் சூளைகளுக்காக விதிகளை மீறி மண் அள்ளுவது, அனுமதி இன்றி செயல்படுவது குறித்து கலெக்டர், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதிகாரிகள் சூளைகளில் நேரில் ஆய்வு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சூளை உரிமையாளர்கள், நேற்று முன்தினம் இரவு, 20க்கும் மேற்பட்டோர் சிவகிரி ரோட்டில் ஓட ஓட விரட்டி கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த கார்த்திக் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் சூளை உரிமையாளர்களிடம், 'போட்டு' கொடுத்துவிட்டனர் என, கார்த்திக் புகார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ