/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தேர்தல் வந்தாலே தி.மு.க., கச்சத்தீவையும் நீட் தேர்வையும் கையில் எடுத்து விடும்: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
தேர்தல் வந்தாலே தி.மு.க., கச்சத்தீவையும் நீட் தேர்வையும் கையில் எடுத்து விடும்: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
திருநெல்வேலி: அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த த.ம.மு.க., தலைவர் ஜான் பாண்டியன் கூறியதாவது:அம்பேத்கர் சிலை எந்த பராமரிப்பும் இன்றி இருக்கிறது.தலைவர்களின் சிலைகள் தற்போது கூண்டில் வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு உடனடியாக எல்லா தலைவர்களின் கூண்டுகளையும் அகற்ற வேண்டும்.அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.தேர்தல் வந்தாலே தி.மு.க., கச்சத்தீவு, நீட் தேர்வை கையில் எடுத்து விடும்.தமிழகத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. கஞ்சா மிக அதிகமாக தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றார்.