உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அலைபேசியில் பேசியபடியே அரசு பஸ் ஓட்டிய டிரைவர்: அச்சத்தில் பயணிகள் விபத்து அச்சத்தில் பயணிகள்

அலைபேசியில் பேசியபடியே அரசு பஸ் ஓட்டிய டிரைவர்: அச்சத்தில் பயணிகள் விபத்து அச்சத்தில் பயணிகள்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் டிரைவர், அலைபேசியில் பேசிக்கொண்டே பஸ்ஸை இயக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. திருநெல்வேலியில் இருந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்ற (TN72 N 2470) என்ற பதிவுஎண் கொண்ட அரசு பஸ் 40 பயணிகளுடன் புறப்பட்டது. டிரைவர், பயணத்தின் போது அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்று பேசியபடியே 10 நிமிடங்களுக்கு மேலாக பஸ்சை இயக்கியுள்ளார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்ஸில் இருந்த ஒருவர் தனது அலைபேசியில் முழுச் சம்பவத்தையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில், டிரைவர் ஒரு கையில் ஸ்டி யரிங், மற்றொரு கையில் அலைபேசி வைத்துக்கொண்டு கவனக்குறைவாக பஸ்ஸை ஓட்டுவது தெளிவாக பதிவாகியுள்ளது. விபத்து அபாயத்தில் பஸ் ஓட்டிய டிரைவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுந்தரம் விஸ்வநாதன்
செப் 12, 2025 10:26

ஏனுங்க போலீஸ் டிபார்ட்மெண்டுல ஆ ஊ ன்னா ஆயுதப்படைக்கு டிரான்ஸ்பர்ன்னு சொல்றமாதிரி இந்த டிரைவர்ங்களுக்குன்னு கழக கட்சி ஆபீசுக்கு டிரான்ஸ்பர் போட்டா என்ன?


Mani . V
செப் 12, 2025 06:26

எல்லாம் கள்ளக் காதல் படுத்தும் பாடு.


நிக்கோல்தாம்சன்
செப் 12, 2025 06:24

அவரை வேலையை விட்டு தூக்க அரசுக்கு யோசனை வருமா


N S
செப் 12, 2025 04:47

தொழிற்சங்க தலைவராக இருக்கலாம். அப்பா துணை உண்டு. யாருக்கும் அஞ்சாதவர் போலும்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 12, 2025 11:16

தொழிற்சங்க தலைவராக இருக்க வாய்ப்பே இல்லை. தொழிற்சங்க தலைவராக இருந்தால் வண்டி ஓட்டமாட்டார். ஒர்க் ப்ரம் ஹோம் ஒன்லி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை