போதையில் மகன் தாக்கியதில் தந்தை பலி
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகே மாதுடையார் குளத்தை சேர்ந்தவர் வேலு 58. இவருக்கு, மனைவியும் இரண்டு மகன்களும், மகளும் உள்ளனர். மூத்த மகன் பெரியசாமி 32, தந்தையுடன் விவசாய பணியில் ஈடுபட்டார். செப். 24ம் தேதி பெரியசாமி குடிபோதையில் இருந்தார். இதனை வேலு கண்டித்தார். ஆத்திரமுற்ற பெரியசாமி, தந்தையை கட்டையால் தாக்கினார். இதில் வேலு பலியானார். பெரியசாமியை வீரவநல்லுார் போலீசார் கைது செய்தனர்.