மாமனார், மைத்துனர்களுக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி புது கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 30. இவருக்கும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகள் உமா செல்விக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவகாரத்து வழக்கு நடந்தது. உமாசெல்வி நகைகளை, மாரிமுத்து வீட்டார் கொடுக்காமல் இருந்ததால் பகை தொடர்ந்தது.கடந்த 2022 ஆக., 14ல் மாரிமுத்துவை மாமனார் மாரியப்பன், 51, மைத்துனர்கள் முத்துக்குட்டி, 25, சுடலைமணி, 26, ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இவ்வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. மாமனார் உள்ளிட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பளித்தார்.