வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தாமிர பரணி ஆக்கிரமிப்புக்கள் அசுத்தங்களை ஒழிக்க நடவடிக்கை எடுங்கள் கோடி புண்ணியம் உங்களுக்கு
கவலைப்பட வேண்டாம் கமிஷனர். மேயர் ஊழல்களாகச் செய்து உங்களுக்கு தொடர்ந்து அல்வா கொடுத்துக் கொண்டே இருப்பார்.
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய கமிஷனராக மோனிகா ரானா 35, நேற்று பொறுப்பேற்றார்.திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக இருந்த சுகபுத்ரா, விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ஆக இருந்த மோனிகா ரானா, திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக அறிவிக்கப்பட்டார். நேற்று காலை அவர் பொறுப்பேற்றார். இவர் இம்மாநகராட்சியின் முதல் ஐ.ஏ.எஸ்.,பெண் கமிஷனர் ஆவார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்தார். 2018 ல் ஐ.ஏ.எஸ். தேர்வானார். சேலத்தில் பயிற்சி கலெக்டர் ஆகவும் நீலகிரியில் சப் கலெக்டராகவும் பின்னர் தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையிலும் பணியாற்றியுள்ளார். 2023 - முதல் 2025 ஜூன் வரை மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கூடுதல் கலெக்டராக பணியாற்றியுள்ளார். தற்போது நேற்று திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.மாநகராட்சி மக்களுக்கு அடிப்படை பணிகள் மேற்கொள்வேன் என்றார்.விடியவிடிய கோப்பு:விருதுநகர் கலெக்டராக பதவி உயர்வு பெற்ற சுகபுத்ரா நேற்று முன்தினம் சென்னையில் முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். இரவோடு இரவாக திருநெல்வேலிக்கு வந்தார். நேற்று ஒருபுறம் புதிய கமிஷனர் மோனிகா ரானா பதவி ஏற்று கொண்டு இருந்த நேரத்தில் இன்னொரு ஹாலில் அமர்ந்து பழைய கோப்புகளை கையெழுத்துப் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்.
தாமிர பரணி ஆக்கிரமிப்புக்கள் அசுத்தங்களை ஒழிக்க நடவடிக்கை எடுங்கள் கோடி புண்ணியம் உங்களுக்கு
கவலைப்பட வேண்டாம் கமிஷனர். மேயர் ஊழல்களாகச் செய்து உங்களுக்கு தொடர்ந்து அல்வா கொடுத்துக் கொண்டே இருப்பார்.