உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: விநாயகர் கொடியேற்றம்

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: விநாயகர் கொடியேற்றம்

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவில் முதற்கட்டமாக விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவில் முதல் நிகழ்வான விநாயகர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கொடிப் பட்டம் பல்லக்கில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவில் சின்ன கொடிமரம் முன்பு கொடிப்பட்டதிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேளதாளம் முழங்க சின்ன கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விநாயகர் திருவிழா தொடங்கியது. கொடி மரத்திற்கு பால் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மகாதீபாராதனையும் நடைபெற்றது.இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மூவர் திருவிழாவும், சந்திரசேகரர் பவானி அம்பாள் திருவிழாவும் நடைபெற உள்ளது. சுவாமி நெல்லையப்பர் திருவிழா ஜூன் 30ம் தேதி கொடியேற்றத்துடன் ஜுலை 8 ம் தேதி சுவாமி நெல்லையப்பர் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ