உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடி மருத்துவமனையை இடிக்க உத்தரவு

அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடி மருத்துவமனையை இடிக்க உத்தரவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடி தனியார் மருத்துவமனையை இடிப்பதில் கருணை காட்ட முடியாது. நான்கு வாரங்களில் அதை இடித்து அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரி சாலையில் டாக்டர் வினோத் குமார் பிலிப் 2015ல் வி.ஜே.மருத்துவமனை கட்டினார். தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுக்கு மட்டும் அனுமதி பெற்ற நிலையில், 5 மாடி கட்டப்பட்டு மருத்துவமனை செயல்பட்டது. தீயணைப்பு மற்றும் அவசர மீட்பு நடவடிக்கைகளுக்கான செட்பேக் இடவசதி இல்லாததால், கட்டடம் விதிகளுக்கு முரணாக இருப்பதாக சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் 2020ல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 2023 அக்., 4 ல் கட்டடத்திற்கு சீல் வைக்கவும், பின் 2025 ஜூலை 18ல் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மேரி கிளெட் ஆகியோர் 8 வாரங்களில் இடிக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். ஆனால் மாநகராட்சி அதனைச் செயல்படுத்தாமல் உரிமையாளரிடம் நீங்களே இடித்துக் கொள்ளுங்கள் என கடிதம் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த கட்டட உரிமையாளர் தரப்பினரின் மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் ஆகியோர், '4 வாரங்களுக்குள் மாநகராட்சியே கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும். அனுமதியற்ற கட்டடங்களுக்கு எந்த வகையிலும் கருணை காட்ட முடியாது,' என தெளிவுபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
அக் 31, 2025 17:36

இந்திய அநீதிமன்ற அநீதிபதிகளுக்கு சுயமாக ஒன்றுமே இல்லையா என்ன???கீழ் + 2 மாடிக்கு பதில் 5 மாடி கட்டினால் அதற்கு அனுமதி வாங்கவேண்டும். அனுமதி வாங்காத பட்சத்தில் அதற்கு அனுமதி வழங்க கார்பொரேஷனுக்கு உத்தரவிட வேண்டும் அநீதிமன்றம் சட்டம் அனுமதிக்கும் வகையில் ???அது ஆஸ்பத்திரி???யாரோ ஒருத்தர் வீடு அல்ல அது ???ஹோட்டல் அல்ல அது அதை இடிக்க ???? அது கட்டும் / உபயோகிக்கும் போது தூங்கியிருந்து விட்டு இப்போ அதை இடிக்கணுமா???


s chandrasekar
அக் 31, 2025 05:54

இதே நடவடிக்கை அனைவருக்கும் பின்பற்ற படுமா.


முக்கிய வீடியோ