உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மகன் இறப்பில் சந்தேகம் உடலை பெற பெற்றோர் மறுப்பு

மகன் இறப்பில் சந்தேகம் உடலை பெற பெற்றோர் மறுப்பு

வள்ளியூர்:மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர் சிறுவன் உடலை வாங்க மறுத்தனர்.திருநெல்வேலி அடுத்துள்ள வெள்ளக்கோவிலை சேர்ந்த மாரியப்பன் மகன் சேர்மதுரை, 13, வடக்கன்குளம் சி.எம்.எஸ்., விடுதியில் தங்கி, எட்டாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம், விடுதி வளாகத்தில் உள்ள மூடி போட்ட கிணற்றுக்குள் மூழ்கி இறந்து கிடந்தார். வள்ளியூர் தீயணைப்பு படையினர் சிறுவன் உடலை மீட்டனர். மாரியப்பன், தன் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தார். நேற்று, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்த சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முயற்சித்தனர். பெற்றோர், உறவினர்கள் உடலை பெற மறுத்தனர். 'சிசிடிவி காட்சிகளை மறைக்கின்றனர். விடுதி வார்டன்கள் பேச மறுக்கின்றனர்' எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்திற்கு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி நீதி விசாரணை கேட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 12, 2025 11:35

உண்மையாக அதிகாரிகள் நடந்து கொள்ளுங்கள் அப்போது தான் மக்களுக்கு அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும். ஒருவனை காப்பாற்ற நீதியை கொல்லாதீர்கள் அந்த நீதி உங்கள் குடும்பத்தை கொல்ல எத்திக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை