உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆடி காரில் சாகச பயணம் போலீஸ் வழக்கு

ஆடி காரில் சாகச பயணம் போலீஸ் வழக்கு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் மூன்றடைப்பு, பாணாங்குளம் -- நாங்குநேரி டோல்கேட் சாலையில், சென்னை பதிவெண் கொண்ட ஒரு ஆடி காரில், இருவர் கதவை திறந்து கொண்டு வேகமாக செல்வதும், காரின் மேல் தளத்தில் அமர்ந்து பயணம் செய்வதுமாக இருந்தனர்.இதை இன்னொரு காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ வெளியானதால் நாங்குநேரி போலீசார் விசாரித்தனர். சென்னை பதிவெண் கொண்ட ஆடி கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SIVA
ஜூன் 14, 2025 08:21

அவரகள் நல்ல வக்கீலை பிடித்தால் இது ஆணி மதம் அடுத்த மாதம் தான் ஆடி மாதம் என்று கேஸை ஜெயித்து கொடுத்துவிடுவார் ....


பெரிய குத்தூசி
ஜூன் 14, 2025 08:14

கடனுக்கு கார் வாங்கி முதல் முதல கார் ஓட்டுற ஆளுங்கதான் இப்படி அரைவேக்காடா பண்ணுவானுக, இன்னொரு அரைவேக்காடு இருக்கானுங்க, காரின் ரூப் டாப் கண்ணாடியை மடக்கி விட்டு குழந்தைகளை மார்புக்கு மேலே தெரியறமாதிரி தனது சொந்த குழந்தைகளின் உயிர் பாதுகாப்பை கூட கருதாமல் வெட்டி பந்தாவுக்கு நிக்க வெப்பானுக, இவனுக எல்லாம் புது கார் உரிமையாளர்கள். உயிர் போனபின் குயோ முயோ னு கத்தி பிரயோசனம் இல்ல. போலீசார், இவனுங்களுக்கு மற்றவர்களுக்கும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற அரைவேக்காடுகள் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 14, 2025 08:08

கட்சி கொடி எதுவும் இருந்திருந்தா அவர்கள் அப்பாவி இளைஞர்கள் ஆகியிருப்பாங்களே


முக்கிய வீடியோ