உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பிளாட்பாரத்தில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்; உரியவரிடம் ஒப்படைத்த போலீசுக்கு குவியுது பாராட்டு

பிளாட்பாரத்தில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்; உரியவரிடம் ஒப்படைத்த போலீசுக்கு குவியுது பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய், லேப்டாப் ஆகியவற்றை, மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமி கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்தார். திருநெல்வேலி மாவட்டம், புதிய பஸ் நிலையத்தில், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பஸ் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்து ரூ.1,42,396 மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை, மாடசாமி போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு பையை உரிமை கோரி வந்த தென்காசி மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் விசாரணையில் பணம், மடிக்கணினி பேச்சிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். நேர்மையான முறையில் பணத்தை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமியை, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். மாடசாமியை காவல் துணை கமிஷனர்கள் கீதா, வினோத் சாந்தாராம், விஜயகுமார் மற்றும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு எஸ்.ஐ., ரசிதா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

mohan v
மார் 06, 2025 11:37

போலீஸ்னா இப்படித்தான் இருக்கனும். இதுதாண்டா போலீஸ்.


நிக்கோல்தாம்சன்
மார் 05, 2025 21:33

பாராட்டுக்கள் சார் , காசு காசு என்று காவல்துறையை ஏலம் விட்டு பிழைப்பு நடத்தும் சர்வாதிகாரி காலத்திலும் காவல்துறை இருந்திருக்குமா


Sampath Kumar
மார் 05, 2025 17:04

பாராட்டுக்கள் சார்


தமிழன்
மார் 05, 2025 16:23

தமிழ்நாடு போலீஸிலும் நல்லவர்கள் உள்ளனர் பாராட்டுக்கள் ஆனால் கேடுகெட்ட திருட்டு அரசியல்வாதிகள் கையில்தான் இதன் துறை உள்ளது வெட்கக்கேடான விசயம்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 05, 2025 16:04

யூனிபார்ம் போட்டுக்கிட்டு அடிக்கிற கொள்ளை இருக்கே ன்னு அவனவன் பேச ஆரம்பிச்சுட்டான் ..... பேரு ரொம்ப நாறிப்போயிட்டு ... அதனால நாங்களே ஏற்பாடு செஞ்ச செட்டப்பு நாடகம் .......


Rajathi Rajan
மார் 05, 2025 17:45

நீ எல்லாம் என்ன பிறப்பு, சரியான இழிபிறப்பு .... துரு பிடித்த இத்து போன தகரத்துக்கு பேரு தங்கரத்தினமாம்?


sri
மார் 05, 2025 15:57

நல்லவேளை மாடல் அரசியல்வாதிகள் கையில் சிக்கவில்லை. நல்லவர்கள் இன்னமும் தமிழகத்தில் உள்ளனர்


Saamaanyan
மார் 05, 2025 15:52

பாராட்டுக்கள்


N Annamalai
மார் 05, 2025 15:30

எங்கள் பாராட்டுகள்


புதிய வீடியோ