உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார். இம் மைதானத்தில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் கூட்டம் இருக்கும். நேற்று இரவு மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரியும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா28, தனது குடும்பத்தினருடன் வ.உ.சி. பூங்காவிற்கு வந்திருந்தார்.அப்போது அங்கு ரவுடிகள் சிலர் சேர்ந்து கொண்டு ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தனர்.சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் அந்த கும்பலை சமாதானப்படுத்தி, அந்த நபரை அனுப்பி வைத்தார்.அதிலிருந்த ஒருவர் ஆத்திரத்தில் அரிவாளால் முகமது ரகமத்துல்லா கையில் வெட்டினார். இதில் காயமுற்ற அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தப்பிய நபர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2025 07:05

ரவுடிகள் பெயரை வெளியிடாம இருப்பது அவர்கள் யார் என்று ஒரு ஊகத்தை கொடுக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை