மாஜி எம்.பி., மகன் வீடு உட்பட பல இடங்களில் ரெய்டு
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நேற்று வருமான வரித்துறையினர் எட்டு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். வண்ணாரப்பேட்டையில், கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் வெங்கடேஷ் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவர் ஸ்டீல் வியாபாரம், விலங்கு எலும்புகளை வாங்கி, அரைத்து வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மகாராஜ நகரில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திருநெல்வேலி தொகுதி முன்னாள் தி.மு.க., - எம்.பி., ஞானதிரவியத்தின் இரண்டாவது மகன் ராஜா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி சாலை ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள அவரது வீடு, துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வேறு பல இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.