உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ராமஜெயம் வழக்கு நெல்லையில் விசாரணை

ராமஜெயம் வழக்கு நெல்லையில் விசாரணை

திருநெல்வேலி:அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், 2012-ல் கொலை செய்யப்பட்ட வழக்கில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார், திருநெல்வேலி மத்திய சிறை கைதி சுடலைமுத்துவிடம், நேரில் சென்று மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். சுடலைமுத்து, ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்றவர். ராமஜெயம் கொலைக்கு முன்னதாக, அவர் திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது, மற்றொரு கைதியுடன் மொபைல் போனில் பேசியுள்ளார். அதில், கொலை வழக்கில் தொடர்புடைய தகவல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், தற்போது நடக்கும் விசாரணை, பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இந்த வழக்கில், முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை