உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சல்பியூரிக் ஆசிட் லாரியில் கசிவு; வேறு லாரிக்கு மாற்றப்பட்டது

சல்பியூரிக் ஆசிட் லாரியில் கசிவு; வேறு லாரிக்கு மாற்றப்பட்டது

திருநெல்வேலி; தூத்துக்குடியிலிருந்து 36,000 லிட்டர் சல்பியூரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு கேரளா சென்ற லாரியில் திடீர் கசிவு ஏற்பட்டதால் மற்றொரு டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. சல்பியூரிக் ஆசிட் ஏற்றிய லாரி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சங்கன்திரடு பகுதியில் சென்றபோது திரவம் கசிந்து வெளியேறியது. இதை கண்ட டிரைவர் உடனடியாக சுத்தமல்லி போலீஸ் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மணிக்கணக்கில் போராடி கசிவைக் கட்டுப்படுத்தினர். பின் லாரியில் இருந்த ஆசிட் அனைத்தையும் வேறு டேங்கர் லாரிக்கு மாற்றினர். பணியில் ஈடுபட்ட லாரி பணியாளர் ஒருவரின் உடலில் ஆசிட் சிந்தி லேசான காயம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை