உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் லைசென்சை ரத்து செய்ய வலியுறுத்தல்

அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் லைசென்சை ரத்து செய்ய வலியுறுத்தல்

திருநெல்வேலி : மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டும் என தேவர் பேரவை மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தேவர் பேரவை நிர்வாகிகளின் மாநில மாநாடு நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. தேவர் பேரவை மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். தியாகராஜன், செல்வ சங்கர் முன்னிலை வகித்தனர். நயினார் பாண்டியன் வரவேற்றார்.கோரிக்கையை வலியுறுத்தி தேவர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமபாண்டியன் பேசினார்.கூட்டத்தில் மூவேந்தர் மக்கள் முன்னணி கழக தலைவர் ராமச்சந்திரன், விடுதலை சிங்கம் கட்சி தலைவர் கருப்பசாமிபாண்டியன், தேவர் பேரவை நிர்வாகிகள் துரைராஜ், நடராஜன், கிழக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி, தென்மண்டல தலைவர் சண்முகவேல், மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், நயினார், சீமைத்துரை, வானுமாமலை, மாயகிருஷ்ணன், முத்துக்குமார், ராஜா, சித்ரா கன்னி உட்பட பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் அக்டோபர் மாதம் 30ம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் 104 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நெல்லையில் 50 ஆயிரம் தொண்டர்கள் கலந்துகொள்ளும் பால்குட பேரணி நடத்தப்படும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து இந்த கோயில்கள் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை