மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
10 பவுன் மோசடி 4 பேர் மீது வழக்கு
25-Sep-2025
தென்காசி : இலஞ்சியில் டவுன் பஞ்.,களில் ஓட்டுப் பதிவு அலுவலர்களாக பணியாற்றுபவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. இலஞ்சி, குற்றாலம், மேலகரம், புதூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் டவுன் பஞ்.,களில் ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு அலுவலர்களாக பணியாற்றுபவர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு இலஞ்சி லெட்சுமிநாராயணா ஹாலில் நடந்தது. டவுன் பஞ்.,களின் நிர்வாக அதிகாரிகளும் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுமான சுப்பிரமணியன், ராசையா, சுந்தர்ராஜன், தேவா, ஆறுமுகம், லிங்கராஜ், கண்மணி தேர்தல் பயிற்சி அளித்தனர்.
கையேடு மற்றும் சி.டி.மூலம் ஓட்டுச் சாவடிகளில் அலுவலர்கள் செயல்படும் விதம் பற்றி விளக்கப்பட்டது. மேலகரம், குற்றாலம், இலஞ்சி, புதூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் டவுன் பஞ்.,களில் வரும் அக். 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. அந்தந்த பகுதியில் அமைந்துள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு ஓட்டுப் பதிவு அலுவலர்கள் 18ம் தேதியே சென்று ஓட்டுச் சாவடியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் தலைமை அலுவலருடன் 4 ஓட்டுப் பதிவு அலுவலர்கள் கொண்ட குழுவினர் பணியாற்றுவர்.
முதலாவது ஓட்டுப் பதிவு அலுவலர் வாக்காளர்களின் அடையாளம் காண வேண்டும். டவுன் பஞ்., தலைவர் தேர்தலுக்கான குறியீட்டு வாக்காளர் பட்டியலுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பதிவேட்பு பராமரிப்பு மற்றும் தலைவர் தேர்தலுக்கான துண்டு சீட்டினை வழங்குவதற்கு பொறுப்பேற்க வேண்டும்
இரண்டாவது ஓட்டுப் பதிவு அலுவலர் அழியாத மைக்கான பொறுப்பு அலுவலராக செயல்பட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது ஓட்டுப் பதிவு அலுவலர்கள் வாக்காளர்களை வரிசைப்படுத்தி ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் ஓட்டுப் போட அனுப்பி வைக்க வேண்டும். ஓட்டுப் பதிவு முடிந்த பின்பு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்க வேண்டும். ஓட்டுச் சாவடிக்கு வழங்கப்பட்ட சாதனங்களையும் இதர கணக்குகளையும் தலைமை அலுவலர், மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் வரை மற்ற ஓட்டுப் பதிவு அலுவலர்களும் உடனிருந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என தேர்தல் பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது.
29-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025