மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
10 பவுன் மோசடி 4 பேர் மீது வழக்கு
25-Sep-2025
தென்காசி : தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது. தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. கடந்த 26ம் தேதி ஒப்புரவு அருட்சாதனம், 27ம் தேதி நற்கருணை திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று முன்தினம் இரவு தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அதிதூதர் அமர்ந்து பவனி வந்தார். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடியே பவனியில் கலந்து கொண்டனர். பாளை.,மறை மாவட்ட திருவழிபாட்டு குழுவினரின் திருஇசை பாடல் கச்சேரியும் நடந்தது.
தேர் பவனியில் பாளை.,மறை மாவட்ட முதன்மை குரு ஜோமிக்ஸ், பங்கு தந்தைகள் வியாகப்பராஜ், பெர்க்மான், ஜேம்ஸ், விசுவாசம், ஜான்சன், விசுவாச ஆரோக்கியராஜ், சேவியர், உதவி பங்குதந்தை சில்வெஸ்டர், மதுரை புனித பேதுரு குரு மடம் பேராசிரியர் மரியஅந்தோணி, அமலவை அருட்சகோதரிகள், அன்பிய இறை சமூகத்தினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் திருப்பலி, பாளை., மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, புனலூர் மறை மாவட்ட ஆயர் செல்விஸ்டர் பொன்னுமுத்தன் தலைமையில் மலையாள திருப்பலி நடந்தது. இதில் தமிழக, கேரள மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
29-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025