உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் நாளை வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் நாளை வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

திருநெல்வேலி : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நாளை (25ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறிதது பல்கலைக் கழக பதிவாளர் மாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக இளைஞர் நலத்துறை வேலைவாய்ப்பு மையம், பாப்புலர் வெய்கில்ஸ் மற்றும் சர்வீஸ் லிமிடெட் எனும் கேரளா மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (25ம் தேதி) நடக்கிறது.இந்த நிறுவனம் 7 ÷ஷாரூம் மற்றும் 27 பணிமனைகளை கேரளா மற்றும் சென்னையில் கொண்டுள்ளது. இந்த கம்பெனியின் விற்பனை நிர்வாகி (சேல்ஸ் எக்ஸ்கீயுட்டிவ்) பதவிக்கு தகுதிவாய்ந்த மாணர்களை தேர்வு செய்யவுள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் மாருதி கார் விற்பனைக்கு பொறுப்பாவர்கள்.

தற்சமயம் சுமார் 100 விற்பனை நிர்வாகிகள் வரை நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் மற்றும் ஊக்கத் தொகை சம்பளமாக வழங்கப்படும்.3 மாதங்களுக்கு பிறகு அவர்கள் செயல்திறனை கருத்தில் கொண்டு ரூ.10 ஆயிரம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும். சென்னையில் தங்கும் இடம் கம்பெனி செலவிலேயே ஏற்பாடு செய்யப்படும். முன் அனுபவம் உள்ள மற்றும் இல்லாத பட்டதாரி ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.விருப்பமுள்ள ஆர்வலர்கள் வரும் 25ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். ஆர்வலர்கள் தங்கள் சுய தகவல் பதிவேடு, 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் அவர்களது போட்டோ அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும்.பதிவு கட்டணம் ரூ.25 மட்டும் செலுத்தவேண்டும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக் கழக இளைஞர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை