உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரயில்வே கேட் மீது லாரி மோதல் 4 மணி நேரம் பாதிப்பு

ரயில்வே கேட் மீது லாரி மோதல் 4 மணி நேரம் பாதிப்பு

திருநெல்வேலி:வள்ளியூர் அருகே உள்ள ரயில்வே கேட், நேற்று காலை 11:00 மணிக்கு ரயில் செல்வதற்காக மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அவசரமாக முந்தி செல்ல முயன்ற கனிம வளம் ஏற்றிய லாரி, இடது ஓர கேட் மீது மோதியது. இதில் ஒயர்கள் துண்டித்து தொங்கின. இதனால், ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நாகர்கோவில் அந்த்யோதயா ரயில், திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்கள் நிறுத்தப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மின் ஒயரை சரி செய்தனர். மதியம் 3:00 மணிக்கு பின், மின் ஒயர்கள் சரி செய்யப்பட்டன. அதன் பிறகே ரயில்கள் போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி