உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / எழுத்தாளர் நாறும்பூநாதன் திருநெல்வேலியில் காலமானார்

எழுத்தாளர் நாறும்பூநாதன் திருநெல்வேலியில் காலமானார்

திருநெல்வேலி: தமிழக அரசின் உ.வே.சா., விருது பெற்ற எழுத்தாளர் நாறும்பூநாதன் 66. நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.துாத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் பிறந்து கோவில்பட்டி ஜி.வி.என். கல்லுாரியில் பயின்றவர். பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள், வலைத்தள பணிகளில் சிறப்பாக செயல்பட்டார்.''கனவில் உதிர்ந்த பூ'' எனும் அவரது நுால் கல்லுாரி ஒன்றில் பாடமாக உள்ளது.''திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்'', ''வேணுவன மனிதர்கள்'', ''கி.ரா. கடைசி நேர்காணல்'' உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளராக பங்காற்றியுள்ளார். தமிழக அரசின் 2022ம் ஆண்டிற்கான உ.வே.சா., விருது பெற்றார். இவரது மனைவி சிவகாம சுந்தரி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரே மகன் ராமகிருஷ்ணன் இன்ஜினியராக கனடாவில் பணியாற்றுகிறார்.அவரது உடல் நெல்லை சாந்திநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.நாளை (மார்ச் 18) இறுதிச் சடங்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A.Gomathinayagam
மார் 17, 2025 14:07

வங்கி பணி, இலக்கிய பணி இரண்டையும் சிறப்பாக செய்தவர், நெல்லை இலக்கிய வட்டாரத்திற்கு பேரிழப்பு


TAMIL ARASAN
மார் 17, 2025 13:02

ரிப் ,அனைவரயும் கவர்ந்த உள்ளம் நிம்மதியாக THUNGUKIRRATHU


முக்கிய வீடியோ