மேலும் செய்திகள்
69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
16-Aug-2024
கடம்பத்துார்:கடம்பத்துார் ஓன்றியம் பாப்பரம்பாக்கம் பகுதியில், நேற்று திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் முன்னிலையில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 23 பயனாளிகளுக்கு கிராம நத்தம் பட்டாவும், 123 பயனாளிகளுக்கு, 1 கோடியே 33 லட்சத்து 89 ஆயிரத்து 947 ரூபாய் மதிப்பில் இலவச பட்டாக்கான ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 38 பயனாளிகளுக்கு, 11 லட்சத்து 26 ஆயிரத்து 776 ரூபாய் மதிப்பீல் பட்டாவும், ஐந்து பயனாளிகளுக்கு 33,450 ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரம் என, மொத்தம் 290 பயனாளிகளுக்கு, 1 கோடியே 45 லட்சத்து 86 ஆயிரத்து 698 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
16-Aug-2024